search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுஷ்மா ஸ்வராஜ்"

    வாரணாசியில் முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் மற்றும் மத்திய வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் ஆகியோர் பிரவசி பாரதிய திவாஸ் மாநாட்டை இன்று துவக்கி வைத்தனர். #YogiAdityanath #SushmaSwaraj #YouthPravasiBharatiyaDiwas
    வாரணாசி:

    மத்திய அரசின் சார்பில் வெளிநாடுவாழ் இந்தியர்களின் செயல்பாட்டை மதிக்கும் வகையிலும், நாட்டின் வளர்ச்சியில் பங்குவகிக்கும் அவர்களை ஊக்குவிக்கும் வகையிலும், பிரவசி பாரதீய திவாஸ் நிகழ்ச்சி இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்தியாவில் கொண்டாடப்பட்டு வருகிறது.

    அவ்வகையில் 15வது பிரவசி பாரதிய திவாஸ் மாநாடு, உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் இன்று தொடங்கியது. வாரணாசில் இந்த மாநாடு முதல் முறையாக நடக்கிறது. இந்த ஆண்டுக்கான பிரவேச பாரதி திவாஸின் கருப்பொருள் "புதிய இந்தியாவை உருவாக்க இந்திய புலம்பெயர்ந்தோர்களின் பங்கு" ஆகும்.

    மாநாட்டின் முதல் அங்கமாக, இளைஞர்களுக்கான பிரவசி பாரதிய திவாஸ் மாநாட்டை உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்திய வெளியுறவுத் துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.



    இன்று முதல் 23 வரையிலான மூன்று நாட்கள் மாநாடு நடைபெற உள்ளது. இதில், பல்வேறு துறைகளின் நிபுணர்கள், தங்கள் துறை சார்ந்த கருத்துக்களை பதிவு செய்ய உள்ளனர். பாரம்பரிய கலைநிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. காஷ்மீர், சாரநாத் மற்றும் கங்கா காட்ஸ் போன்ற புகழ்பெற்ற இடங்களுக்கு வெளிநாடுவாழ் இந்தியர்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளனர்.

    அடுத்த மூன்று நாட்களில் கலந்துரையாடல்களின் போது, ​​இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பல உலகத் தலைவர்கள்,  புலம்பெயர்ந்த இந்தியர்களின் பங்கினைக் குறித்து கலந்துரையாடுவார்கள்.

    இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சிகள்:

    இன்று நடைபெறும் நிகழ்வில் அடுத்த தலைமுறை மீது, குறிப்பாக உத்திரபிரதேச இளைஞர்கள் மீது கவனம் செலுத்தப்படுகிறது. இதில் பங்கேற்பதற்காக ஏராளமான இளம் புலம்பெயர்ந்தோர் இந்தியாவுக்கு வந்துள்ளனர். துவக்க விழாவில் உ.பி முதல்வருடன் மத்திய மந்திரிகள் சுஷ்மா, ராஜ்யவர்தன் சிங் ரத்தோர், நியூசிலாந்து பாராளுமன்ற உறுப்பினர் கன்வல் ஜீத் சிங் பக்ஷி, நார்வே எம்.பி.  ஹிமான்ஷு குலதி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    நாளை நடைபெற உள்ள நிகழ்வில், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தலைமை விருந்தினரான மொரிஷியஸ் பிரதமர் பிரவீன் ஜுக்நாத் ஆகியோர் ‘பிரவசி பாரதிய திவாஸ்’ மாநாட்டை துவக்கி வைக்க உள்ளனர். சவால்கள் மற்றும் வாய்ப்புகள் முதல்,  நிலையான வளர்ச்சி, செயற்கை நுண்ணறிவு மற்றும் சைபர் திறன் வரை பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக பல்வேறு கருத்தரங்குகள் நடைபெறுகின்றன. தேர்ந்தெடுக்கப்பட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட பிரவசி பாரதிய பிரதிநிதிகளுக்கும், மாநில தலைவர்களுக்கும் பிரதமர் மோடி மதிய விருந்தினை வழங்க உள்ளார்.

    புதன்கிழமை  நடைபெற உள்ள விழாவில், தேர்ந்தெடுக்கப்பட்ட என்.ஆர்.ஐ., பி.ஐ.ஓ.க்கள் மற்றும் என்ஆர்ஐக்களால் நடத்தப்படும் அமைப்புகளுக்கு பிரவசி பாரதிய சம்மான் விருது (பிபிபிஏ), வழங்கப்படும். இந்தியாவிலும், வெளிநாட்டிலும் பல்வேறு துறைகளில் கணிசமான பங்களிப்பு செய்தவர்களுக்கு இந்த விருதுகளை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்குவார்.

    மாநாட்டிற்கு வருகை தந்திருக்கும் பிரதிநிதிகளை உற்சாகமூட்டவும், ஓர் அற்புத அனுபவத்தை வழங்கவும் கங்கை மலர்களால் மேடை அலங்கரிக்கப்பட்டு கண்கவர் வகையில் பல்வேறு கலாச்சார நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன. #YogiAdityanath  #SushmaSwaraj  #YouthPravasiBharatiyaDiwas

    உஸ்பெகிஸ்தானில் நடைபெறும் இந்தியா-மத்திய ஆசிய நாடுகள் பேச்சுவார்த்தையில் பங்கேற்பதற்காக இந்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் சமர்கன்ட் நகரை வந்தடைந்தார். #SushmaSwaraj #CentralAsiaDialogue #FirstCentralAsiaDialogue
    சமர்கன்ட்:

    மத்திய ஆசிய கண்டத்தில் உள்ள நாடுகளுடன் அனைத்து துறைகளிலும் இந்தியாவின் உறவுகளை விரிவுபடுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்துவதற்காக இந்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 4 நாள் பயணமாக இந்நாடுகளுக்கு சென்று வந்தார்.

    இந்நிலையில், மத்திய ஆசிய கண்டத்தில் உள்ள நாடுகள் அனைத்து நாடுகளின் தலைவர்களும் நாளை முதன்முறையாக ஒன்றுகூடி உஸ்பெகிஸ்தான் நாட்டில் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். இதில் பங்கேற்பதற்காக இந்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ்  இருநாள் பயணமாக இன்றிரவு அந்நாட்டின் தலைநகரான சமர்கன்ட் நகரை வந்தடைந்தார்.



    சமர்கன்ட் விமான நிலையத்தில் அவருக்கு உஸ்பெகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி அப்துல்அஜிஸ் கமிலோவ் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. #SushmaSwaraj  #CentralAsiaDialogue #FirstCentralAsiaDialogue
    ஐ.நா பொதுச்சபை கூட்டத்தின் போது வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜிடம் எனது நண்பர் மோடிக்கு என் அன்பினை தெரிவியுங்கள் என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறினார். #UNGA2018 #SushmaSwaraj #DonaldTrump
    நியூயார்க் :

    அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் ஐ.நா. சபையின் பொதுக்கூட்டம் நடைபெறுவது வழக்கம். இரண்டு வாரம் நடைபெறும் இந்த பொதுக்கூட்டத்தில் உலக நாடுகளின் தலைவர்கள் பங்கேற்று நடப்பு ஆண்டில் உள்ள முக்கிய விவகாரங்கள் குறித்து பொதுவிவாதம் நடத்துவார்கள்.

    இந்த ஆண்டிற்கான ஐ.நா பொதுச்சபையின் 73-வது கூட்டம், இன்று துவங்கி அக்டோபர் 1 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

    இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக மத்திய வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் நியூயார்க் நகருக்கு சென்றுள்ளார்.  இந்த நிலையில், உலக போதை பொருள் விவகாரத்தில் நடவடிக்கை எடுப்பதற்கான உலகளாவிய கூட்டம் ஒன்று டொனால்டு டிரம்ப் தலைமையில் நடந்தது.

    இந்த கூட்ட முடிவில் ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே சுவராஜை கட்டி பிடித்து அன்பை வெளிப்படுத்தினார்.  அதன்பின் டிரம்பிடம் சுஷ்மாவை அறிமுகப்படுத்தினார்.

    அதன்பின் சுவராஜ், பிரதமர் நரேந்திர மோடியிடம் இருந்து அன்பினை பெற்று வந்துள்ளேன் என டிரம்பிடம் கூறினார்.  இதற்கு டிரம்ப், நான் இந்தியாவை நேசிக்கிறேன். எனது நண்பர் பிரதமர் மோடிக்கு என் அன்பினை தெரிவியுங்கள் என சுஷ்மா சுவராஜிடம் கூறினார். #UNGA2018 #SushmaSwaraj #DonaldTrump
    ஐ.நா பொதுச்சபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமெரிக்கா சென்றுள்ள சுஷ்மா ஸ்வராஜ், ஸ்பெய்ன், கொலம்பியா, நேபாளம் உள்ளிட்ட நாடுகளின் வெளியுறவுத்துறை மந்திரிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். #UNGA2018 #SushmaSwaraj
    நியூயார்க் :

    அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் ஐ.நா. சபையின் பொதுக்கூட்டம் நடைபெறுவது வழக்கம். இரண்டு வாரம் நடைபெறும் இந்த பொதுக்கூட்டத்தில் ஐக்கிய நாடுகள் சபையில் உறுப்பினராக உள்ள 193 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்று நடப்பு ஆண்டில் உள்ள முக்கிய விவகாரங்கள் குறித்து பொதுவிவாதம் நடத்துவார்கள்.

    இந்த ஆண்டிற்கான ஐ.நா பொதுச்சபையின் 73-வது கூட்டம், இன்று துவங்கி அக்டோபர் 1 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் நியூயார்க் நகருக்கு சென்றுள்ளார்.

    இந்நிலையில், உலக போதை பொருள் விவகாரத்தில் நடவடிக்கை எடுப்பதற்கான உலகளாவிய கூட்டம் ஒன்று டொனால்டு டிரம்ப் தலைமையில் நடந்தது. இதில் பங்கேற்ற சுஷ்மா சுவராஜ் கூட்டத்தின் முடிவில் ஸ்பெய்ன், கொலம்பியா, நேபாளம் மற்றும் மொராக்கோ உள்ளிட்ட நாடுகளின் வெளியுறவுத்துறை மந்திரிகளை சந்தித்து பேசினார்.

    இந்த சந்திப்பின் போது, அந்நாடுகளுடனான இந்தியாவின் நல்லுறவை மேம்படுத்தும் வகையில் சுஷ்மா சுவராஜ் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார் என வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் ராவேஷ் குமார் தெரிவித்துள்ளார். #UNGA2018 #SushmaSwaraj
    இந்தியா - பாகிஸ்தான் வெளியுறவு மந்திரிகள் பேச்சுவார்த்தை நடத்த முன் வந்துள்ளது மிகவும் சிறப்பான செய்தி என அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் கருத்து தெரிவித்துள்ளது #IndPakTalks #US
    புதுடெல்லி:

    எல்லையில் அத்துமீறல், போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல், இந்தியாவின் பகுதிகளில் பாகிஸ்தான் பயங்கரவாத குழுக்களின் தாக்குதல்கள் என அடுத்தடுத்து நடந்த அசம்பாவித நிகழ்வுகளால் இந்தியா - பாகிஸ்தான் பேச்சுவார்த்தைகள் முடங்கியே உள்ளது. இதனால், இரு நாடுகளின் உறவிலும் முன்னேற்றம் ஏற்படவில்லை.  

    சமீபத்தில் பாகிஸ்தானின் பிரதமராக பொறுப்பேற்ற இம்ரான் கான், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். அதில், இந்தியா - பாகிஸ்தான் இடையே தடைபட்ட அமைதி பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க வேண்டும் என கூறியிருந்தார். 

    மேலும், இம்மாத இறுதியில் அமெரிக்காவில் நடக்க இருக்கும் ஐநா பொதுச்சபை கூட்டத்தின் போது, இரு நாட்டு வெளியுறவு மந்திரிகள் சந்தித்து பேச வேண்டும் என கடிதத்தில் இம்ரான் கான் குறிப்பிட்டிருந்தார்.

    இதனை அடுத்து, ஐநா பொதுச்சபை கூட்டத்தின் ஒரு அங்கமாக மத்திய வெளியுறவு மந்திரி சுஷ்மா ஸ்வராஜ் - பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி ஷா மெஹ்மூத் குரேஷி சந்தித்து பேச உள்ளதாக வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் ராவீஷ் குமார் தெரிவித்திருந்தார். 

    இதன்படி, நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் ஐநா பொதுச்சபை கூட்டத்தில் பங்கேற்கும்  இருநாட்டு வெளியுறவுத்துறை மந்திரிகளும் சந்தித்து பேசுவார்கள் என்று தெரிகிறது. இந்தியா - பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரிகள் இடையிலான பேச்சுவார்த்தை நடைபெற இருப்பதாக வெளியான செய்தி சிறப்பு மிக்கது என்று அமெரிக்கா பாராட்டு தெரிவித்துள்ளது. 

    அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ஹீதர் நயூர்ட் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில், “ இந்தியா- பாகிஸ்தான் தலைவர்கள் சந்தித்து பேச இருப்பதாக வெளியான தகவல்கள் எங்கள் கவனத்துக்கு வந்தது. மிகவும் சிறப்பான செய்தி இது என்று நான் கருதுகிறேன்” என்றார். 
    பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் கோரிக்கையை ஏற்று அமெரிக்காவில் நடக்க உள்ள ஐநா பொதுச்சபை கூட்டத்தில், இரு நாட்டு வெளியுறவு மந்திரிகள் சந்தித்து பேசுவார்கள் என வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. #IndPakTalks #UNGA
    புதுடெல்லி:

    எல்லையில் அத்துமீறல், போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல், இந்தியாவின் பகுதிகளில் பாகிஸ்தான் பயங்கரவாத குழுக்களின் தாக்குதல்கள் என அடுத்தடுத்து நடந்த அசம்பாவித நிகழ்வுகளால் இந்தியா - பாகிஸ்தான் பேச்சுவார்த்தைகள் முடங்கியே உள்ளது. இதனால், இரு நாடுகளின் உறவிலும் முன்னேற்றம் ஏற்படவில்லை.  

    சமீபத்தில் பாகிஸ்தானின் பிரதமராக பொறுப்பேற்ற இம்ரான் கான், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். அதில், இந்தியா - பாகிஸ்தான் இடையே தடைபட்ட அமைதி பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க வேண்டும் என கூறியிருந்தார். 

    மேலும், இம்மாத இறுதியில் அமெரிக்காவில் நடக்க இருக்கும் ஐநா பொதுச்சபை கூட்டத்தின் போது, இரு நாட்டு வெளியுறவு மந்திரிகள் சந்தித்து பேச வேண்டும் என கடிதத்தில் இம்ரான் கான் குறிப்பிட்டிருந்தார்.

    இந்நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த வெளியுறவு செய்தித்தொடர்பாளர் ராவீஷ் குமார் பேசுகையில், ஐநா பொதுச்சபை கூட்டத்தின் ஒரு அங்கமாக மத்திய வெளியுறவு மந்திரி சுஷ்மா ஸ்வராஜ் - பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி ஷா மெஹ்மூத் குரேஷி சந்தித்து பேச உள்ளதாக தெரிவித்தார்.

    இதற்கான நாள் விரைவில் அறிவிக்கப்படும் எனவும் ராவீஷ் குமார் தெரிவித்தார். 
    சுஷ்மா சுவராஜை சமூக வலைதளங்களில் சிலர் மோசமான வகையில் கிண்டல் செய்து வந்தது தொடர்பாக பாஜகவிடம் இருந்து எந்த கருத்தும் வெளிவராத நிலையில், அந்த அமைதியை ராஜ்நாத் சிங் உடைத்துள்ளார். #SushmaSwaraj #RajnathSingh
    புதுடெல்லி:

    உத்தரப்பிரதேசத்தில் கணவர் முஸ்லிம் என்பதால் பெண்ணுக்கு பாஸ்போர்ட் மறுக்கப்பட்டதாக செய்திகள் வெளியானது. இதனை அடுத்து, அந்த மண்டல பாஸ்போர்ட் அதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டார். ஆனால், போதிய ஆவணங்கள் இல்லாத காரணத்தால் பாஸ்போர்ட் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது என கூறி அந்த அதிகாரிக்கு ஆதரவாக சுஷ்மா மீது பலர் விமர்சனங்களை முன்வைத்தனர்.

    சமூக வலைதளங்களில் ஒரு குறிப்பிட்ட பிரிவினரின் சுஷ்மாவுக்கு எதிராக மோசமாக விமர்சிக்க, பொங்கி எழுந்த அவர் வெளிப்படையாகவே இது தொடர்பாக ட்வீட் செய்ய தொடங்கினார். பலர் எல்லை மீறி சுஷ்மாவின் கணவரையும் சேர்ந்து விமர்சித்தாலும், பாஜகவிடம் இருந்தோ, மத்திய அரசிடம் இருந்தோ எந்த கண்டிப்பும் வரவில்லை.



    இதற்கிடையே, தனக்கு எதிரான ட்வீட்களை நீங்கள் ஆதரிக்கிறீர்களா? என தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வாக்கெடுப்பு ஒன்றை நடத்தினார். அதில், 57 சதவிகிதம் பேர் இல்லை என பதிலளித்துள்ளனர். காங்கிரஸ், இடதுசாரிகள், காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா ஆகியோர் சுஷ்மா மீதான இந்த சைபர் தாக்குதல்களை கண்டித்தனர்.

    இந்நிலையில், இது தொடர்பான கேள்விக்கு இன்று பதிலளித்த உள்துறை மந்திரி, சுஷ்மா மீதான விமர்சனங்கள் தவறானவை என கூறினார். 
    பாஸ்போர்ட் விண்ணப்பிக்க மத்திய அரசால் அறிமுகம் செய்யப்பட்ட பாஸ்போர்ட் சேவா மொபைல் செயலியை, 2 நாட்களில் 10 லட்சம் பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர். #PassportSeva #MEA #SushmaSwaraj
    புதுடெல்லி:

    புதிதாக பாஸ்போர்ட் விண்ணப்பிக்க, புதுப்பிக்க மற்றும் தொலைந்து போன பாஸ்போர்டுக்கு மாற்று பாஸ்போர்ட் பெறுவதற்காக மத்திய வெளியுறவு அமைச்சகம் ‘பாஸ்போர்ட் சேவா’ புதிய செயலி ஒன்றை நேற்று முன்தினம் வெளியிட்டது. பாஸ்போர்ட்டுக்கான கட்டணம் செலுத்துதல், நேர்முக தேதியை தேர்வு செய்வது ஆகியவற்றையும் இந்த செயலி மூலமாக எளிதாக செய்ய முடியும்.

    இந்நிலையில், 2 நாட்களில் ‘பாஸ்போர்ட் சேவா’ செயலியை 10 லட்சம் பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர். செயலி மெதுவாக இயங்குவதாக பலர் கம்மெண்ட் செய்திருந்தாலும், கூடுதல் அம்சங்கள் சேர்க்கப்பட்டு அப்டேட் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    இந்தியா சார்பில் வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா ஸ்வராஜ் டோர்னியர் விமானத்தை செஷல்ஸ் அதிபர் டேனி பயூரேவிற்கு பரிசாக அளித்தார். #Seychelles #SushmaSwaraj #DannyFaure
    புதுடெல்லி :

    ஆறு நாள் அரசு முறை பயணமாக செஷல்ஸ் அதிபர் டேனி பயூரே இந்தியா வந்துள்ளார். டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் ராம் நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் அவரை நேற்று வரவேற்றனர். அதைத்தொடர்ந்து, பிரதமரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அதில், இருதரப்பு உறவுகளையும் வலுப்படுத்துவது தொடர்பாக டேனி பயூரே - மோடி விவாதித்தனர்.

    சந்திப்பின் முடிவில் இருநாடுகளுக்கு இடையே சில துறைகளில் ஒப்பந்தம் கையெழுத்தானது. கடந்த 2015-ம் ஆண்டு பிரதமர் மோடி செஷல்ஸ் நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது அந்நாட்டுக்கு டோர்னியர் விமானத்தை  பரிசாக வழங்க முடிவு செய்யப்படிருந்தது.

    இந்நிலையில், டெல்லி பாலம் விமான நிலையத்தில் டேனி பயூரேவிற்கு இந்தியா சார்பில் டோர்னியர் விமானத்தை வெளியுறவு மந்திரி சுஷ்மா ஸ்வராஜ் பரிசாக அளித்தார்.  வெளியுறவுத்துறை இணை மந்திரி வி.கே.சிங் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    டோர்னியர் விமானம், கடற்கரை பகுதிகளில் ரோந்து அல்லது அச்சுறுத்தல்களை கண்காணிக்கும் திறன் உடையது. ஏற்கெனவே செஷல்ஸ் நாட்டிற்கு ஒரு டோர்னியர் விமானம் உள்பட இரண்டு ஹெலிகாப்டர்களை இந்தியா பரிசாக வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. #Seychelles #SushmaSwaraj #DannyFaure
    ×